ஐதராபாத்:
விரைவில் தமிழிலும் வருது ஒரு பக்தி சேனல். இதற்காக மத்திய அரசின் அனுமதியை பெற காத்திருக்கிறது திருப்பதி தேவஸ்தானம். விஷயம் இதுதாங்க.
தெலுங்கில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பநீவெங்கடேஸ்வரா என்ற பக்தி சேனல் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கில் ஒளிப்பரப்பாகும் இந்த சேனல் தமிழில் தினமும் ஒரு மணிநேரம் ஒளிபரப்பாகி வருகிறது. பக்தர்களுக்கு விருப்பமான சேனலாக இது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் இதை மனதில் வைத்து தமிழில் முழுநேர பக்தி சேனல் தொடங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே மத்திய அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டது.
24 மணிநேர தமிழ் பக்தி சேனலுக்கான சேட்டிலைட் வசதி, தொழில்நுட்ப வசதி அனைத்தையும் செய்து முடித்து அனுமதிக்காக திருப்பதி தேவஸ்தானம் காத்திருக்கிறது. மத்திய அரசு ஓகே சொல்லிவிட்டால் பக்தர்கள் தினமும் திருப்பதியில் நடக்கும் விஷயங்களை தமிழிலேயே பார்க்கலாம். அந்தநாளும் எந்நாளோ!