ஈச்சனாரி விநாயகர் கோவில், கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில், நெடுஞ்சாலையில் உள்ளது.
எந்த ஒரு நல்ல செயல்களை செய்வதற்கு முன்பு இந்த கோயிலிற்கு வந்து, விநாயகரை வணங்கி வழிபட்டால் வெற்றி கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இந்த திருத்தலம் வந்து விநாயகரிடம் மனம் உருகி, பிரார்த்தனை செய்ய, குழந்தைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைத்து, நல்ல உத்தியோகம் கிடைத்து வாழ்வில் உயர்வு பெறுவது உறுதி.
பக்தர்களின் குடும்பப் பிரச்சனைகளை தீர்ப்பதில், இந்த விநாயகர் பெயர் பெற்றவர். இவ்வாறு இத்தலத்திற்கு வந்து விநாயகனை கும்பிட்டு, பலன் கிடைத்தவர்கள், நேர்த்தி கடனாக பால் அபிஷேகம் செய்து, பால் கொழுக்கட்டை படைத்தல், சிதறு தேங்காய் உடைத்தல், சதுர்த்தி விரதம் பூணுதல், அருகம்புல் மாலை சாத்துதல், ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல் போன்றவற்றை செய்து வருகிறார்கள்.
விநாயகருக்கு விசேஷமான நாட்களில், இந்த கோயிலிற்கு வந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.