சனி பகவானுக்கு உகந்த விரதங்களை, கடைபிடிக்கும் முறையை நாம் இன்றைக்கு பார்க்கலாம்.
சனிக்கிழமைகளில், மதிய உணவை தவிர்த்து, விரதம் இருந்து சனி பகவானின் ஸ்தோத்திரங்களை சொல்லி வழிபட வேண்டும்.
சிறிது எள்ளை பொட்டலமாக கட்டி தினசரி இரவு படுக்கும்போது அதனை தலைக்கு அடியில் வைத்துக் கொண்டு படுத்து, காலையில் அதனை அன்னத்தில் கலந்து காகத்திற்கு 9 நாள் அல்லது 48 நாட்கள் அல்லது 108 நாட்களுக்கு அன்னமிடலாம்.
சனிபகவானுக்கு, நவக்கிரக சாந்தி ஹோமங்கள் செய்து, அபிஷேகம் செய்து வரலாம்.
சனிபகவானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, கருப்பு அல்லது நீல நிற வஸ்திரம் சாத்தி வடைமாலை அணியலாம்.
மேலும் சனிக்கிழமைகளில், சனிபகவானை வழிபடுபவர்கள் ஏழை குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்கலாம்.