கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி மாவட்டத்தில், நல்லூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது, மூகாம்பிகை ஆலயம்.


இயற்கை எழில் நிறைந்த இக்கோவிலிற்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இத்தளத்தில் மூகாம்பிகை வீற்றிருக்கிறாள். இங்கு வந்து வழிபட்டால் வாழ்க்கையில் நலம் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


கோவிலில், ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அம்பாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜை செய்யப்படுகிறது. மேலும் கோயில் உள் பிரகாரம் முழுவதும் ஆற்று நீரால் கழுவப்படுகிறது. வெள்ளிக்கிழமை தோறும் கோயில் வளாகத்தில் ஆயிரத்தெட்டு விளக்குகள் கொண்ட தீபமரத்தில் தீபம் ஏற்றப்படுகிறது. 


அம்பாளை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தினமும் மதியம், இரவு என இரண்டு முறை அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் தினமும் இரவு சந்நிதானம் மூடும் நேரத்தில் சுக்கு நீர் வழங்கப்படுகிறது. 




Find out more: