இத்தலம் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கு சவுடாம்பிகை அம்மன் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அவருடன் விநாயகர், ராமலிங்கேஸ்வரர் ஆகியோரும் பக்தர்களுக்கு அருள்புரிக்கின்றனர்.
இக்கோவிலின் மகா மண்டபத்தில் அமைந்துள்ள 8 தூண்களில், தர்த்தன வினாயகர், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேதர சுப்பிரமணியர், மகாவிஷ்ணுவின் தசாவதாரத் திருவுருவங்கள் மகிஷாசுர மர்த்தினி, திருமூர்த்தி நாகபந்தனத்தோடு கூடிய சிவலிங்கம், காமதேனு, கற்பகவிருஷம் ஆகிய அரிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
கோவிலில், கிருத்திகை, அம்மாவாசை, பிரதோஷம் ஆகிய தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. மேலும் இத்தலத்தில் ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில், ஏழை பெண்களுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படுகின்றன.
குழந்தை இல்லாதவர்கள் மற்றும் திருமண தடை இருப்பவர்கள் இத்தலத்திற்கு வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், நினைத்த காரியம் நிறைவேறும் என்று பரவலாக கூறப்படுகிறது.