இத்தலம் விழுப்புரம் மாவட்ட, விக்கிரவாண்டி ஊரில் அமைந்துள்ளது. இங்கு நாகம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வினாயகர், வள்ளி தெய்வானை, ஆறுமுகர் மற்றும் நாகர்களின் சன்னதிகளும் உள்ளன.


இங்கு நாகம்மனின் முகம் மெய்சிலிர்க்கும் வகையில் காட்சி தருகின்றது. நாகம்மனின் தலை பகுதி மட்டும் 5½ அடி அகலமும், 3½ அடி நீளமும் கொண்டதாகும்.


வாழ்க்கையில் தொடர்ந்து துன்பங்களை சந்தித்து வருபவர்கள், இத்தலத்திற்கு வந்து நாகம்மனை வழிபட்டால், துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. 


மேலும் ராகு - கேது தோஷம், திருமண தடை, நாக தோஷம் உள்ளிட்ட தோஷங்களுக்கு இத்தலத்தில் பரிகார பூஜை செய்யப்படுகிறது. 


மேலும் இத்தலத்திற்கு அருகே முத்தாம்பிகை அம்மன் கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Find out more: