மைசூர்:
அட இதுல்ல பெரிய விஷயம் என்று மைசூர் மக்கள் மூக்கின் மேல் விரலை வைக்கின்றனர். எதற்காக தெரியுங்களா? இதற்காகத்தான்.
மைசூரில் புகழ் பெற்ற தசரா விழாவில் பங்கேற்க உள்ள யானைகளுக்கு ரூ.32 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாம். இதுதான் டாப் ஆப் மைசூல் சிட்டியாக உள்ளது.
மைசூர் சாமுண்டீஸ்வரி தேவி கோயிலில் நடக்கும் தசரா விழா உலக பிரசித்தி பெற்றது. அம்மன் திருவுருவ சிலையை அர்ஜீனா யானை சுமந்து செல்ல பிற 11 யானைகள் கம்பீரமாக அணி வகுத்து பின்னால் செல்வதை காண கண்கோடி வேண்டும் என்பது மறுக்க முடியாத உண்மை.
தசரா விழாவில் பங்கேற்கும் 12 யானைகளுக்கும் யுனைடெட் இந்தியா நிறுவனம் மூலம் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாம். அதுமட்டுமா? பாகன்களுக்கும் கூட இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. எப்படி யானைகளுக்கு ரூ.32 லட்சம், பாகன்களுக்கு ரூ.35 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் செஞ்சு இருக்காங்கப்பா...