வரும் திங்கள் கிழமை செப் 5-ந்தேதி, விநாயகருக்கு விசேஷமான நாளாகும். அன்றைக்கு, விநாயகர் சதுர்த்தியை பக்தர்கள் கோலாகலமாக கொண்டாடி மகிழ உள்ளனர்.
அதனால் அன்றைய தினத்தில் விநாயகருடைய பூஜைக்கு தேவைப்படுவது என்னென்ன என்பதை இப்போது நாம் பார்க்கலாம்.
விநாயகருக்கு பூஜை செய்யும் போது அருகம்புல், மந்தாரை பூ, வன்னி இலை ஆகிய மூன்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். தாழம்பூ, துளசி இந்த இரண்டும் பூஜையில் சேர்க்க கூடாது.
இதையடுத்து விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை, அவல், அப்பம், இளநீர், எள்ளுருண்டை, சர்க்கரை பொங்கல், மிளகு சாதம், பணியாரம், வடை போன்றவற்றை பிரசாதமாக படைக்கலாம்.
நெய் விளக்கில் தீபம் ஏற்றி, விநாயகருக்கு பூஜை செய்து வழிபட வேண்டும். மேலும் விநாயகருக்கு நெய், பால், தயிர் மற்றும் பழவகைகளை கொண்டு அபிஷேகம் செய்து வந்தால், மிகவும் நல்லது.