பராசக்தி அம்மனை நினைத்து, தினமும் இந்த பாடலை பூஜையில் பாடி வந்தால், பெண்களின் துன்பங்கள் நீங்கும். தினமும் பாட முடியாதவர்கள், செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் பூஜை செய்து, கூறி வரலாம். இவ்வாறு செய்து வந்தால், துன்பங்கள் படிப்படியாக அகலும்.


பாடல் : 


அன்பே சிவமாய் அமர்வாள் நம்மை அன்னை பராசக்தி
ஆறுதல் சொல்லி அமுதம் பொழிவாள் ஆதிபராசக்தி
இப்புவி இன்பம் வேண்டாம் என்பாள் அன்னை பராசக்தி
ஈடில்லா காட்சி அளிப்பாள் அன்னை பராசக்தி
உயர்வு தாழ்வு ஒன்றும் பாராள் அன்னை பராசக்தி
ஊக்கம் இருந்தால் போதும் என்பாள் அன்னை பராசக்தி
எங்கும் நிறைந்த ஜோதியாய் நிற்பாள் அன்னை பராசக்தி
ஏகாட்சரமாய் அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி
ஐங்கரநாதனை ஆதியில் தந்தால் அன்னை பராசக்தி
ஒட்டியான பீடத்தில் அமர்வாள் ஆதிபராசக்தி
ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி
ஒளவை எனவே அவனியில் வந்தாள் ஆதிபராசக்தி
ஓம் என்றாலே ஓடியும் வருவாள் அன்னை பராசக்தி
ஓம் என்றாலே தேடியும் வருவாள் அன்னை பராசக்தி
ஓம் என்றாலே ஆடியும் வருவாள் அன்னை பராசக்தி
ஓம் என்றாலே பாடியும் வருவாள் ஆதிபராசக்தி
ஓம் என்றாலே உருவாய் வருவாள் அன்னை பராசக்தி
ஓம் என்றாலே குருவாய் வருவாள் ஆதிபராசக்தி
அன்னை பராசக்தி ஜெய ஆதி பராசக்தி
அன்னை ஆதிபராசக்தி ஜெய ஆதிபராசக்தி 


குறிப்பு : இந்த பாடலை உச்சரிக்கும் நாள் அன்று, மாமிசம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


Find out more: