இத்தலம் கோவை மேட்டுப்பாளையம் சாலையின் அருகே உள்ளது. கோவிலின் முன்புறம் ராஜகோபுரம் கவரும் வகையில் உள்ளது.  இங்கு அரங்கநாதராக, திருமால் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். 


இதையடுத்து சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மன், தும்பிக்கையாழ்வார், ராமானுஜர், காளிஅண்ணன் சுவாமி ஆகியோரும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். கோயிலின் பின்புறம் பூவரச மரம் உள்ளது. இங்கு பக்தர்கள் குழந்தை வரம், மாங்கல்ய வரம் வேண்டி கயிறு கட்டி பிரார்த்தனை செய்கின்றனர். 


மேலும் பாவம் மற்றும் சாபங்களை தீர்க்க, இத்தலத்திற்கு வந்து பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாதம், 10 நாட்கள் தேர்த்திருவிழா நடைபெறும்.அப்போது இங்கு பக்தர்கள் கூட்டம் கூட்டமாக, காணப்படுவர்.


மேலும், தினமும் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை இத்தலம் திறந்து இருக்கும். இங்கு, 3 வேளை பூஜையும் நடைபெறுகிறது. 



Find out more: