சிலருக்கு வேலைக்கு போன உடனேயே தூக்கம் வரும். இதனால் பணியில் அவர்களால், சரியாக கவனம் செலுத்த முடியாது. உடன் பணிபுரிபவர்களும், தூங்கு மூஞ்சி என்று கிண்டல் செய்வர். இதில் இருந்து விடுபட....
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை தினமும் கூறி வந்தால், பகல் தூக்கத்திற்கு 'குட் பை' சொல்லலாம்.
பாடல் :
அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே
நியர்வளை முன்கையாள் நேரிழை அவளொடும்
கயல் வயல் குதிகொளும் கழுமல வளநகர்ப்
பெயர்பல துதிசெய பெருந்தகை இருந்ததே
பொருள்: மனமே! மனச்சோர்வு, உடல்சோர்வு இருக்கிறது என்ற எண்ணத்தை அடியோடு ஒழித்து விடுவாயாக. மீன்கள் விளையாடும் வயல்கள் சூழ்ந்ததும், வளம் நிறைந்ததும், விதவிதமான வளையல்களை அணிந்த உமையவளோடு வீற்றிருப்பதும், பல பெயர்களை உடையதுமான சீர்காழியில் வீற்றிருக்கும் பெருந்தகையான பிரம்மபுரீஸ்வரரைத் துதி செய்வாயாக.