சனி பகவான் எப்போதும் காகத்தின் மேல் அமர்ந்திருப்பதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் அவர், எருமை மேல் அமர்ந்து காட்சியளிப்பதை, யாரவது பார்த்திருப்போமா....
கண்டிப்பாக பார்த்திருக்க முடியாது. ஆனால் இப்போது நீங்கள் அதை பார்க்க போகிறீர்கள்.
ஜெய்ப்பூர் செல்லும் வழியில், வேண்வீட்டா என்ற ஊர் அமைந்துள்ளது. அங்கு சனிபகவான் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இத்தலத்தில் நவகிரகங்கள் வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் நடுவில் பெரிய உருவத்துடன் சனிபகவான், எருமை மேல் அமர்ந்து கொண்டு அருள்பாலிக்கிறார்.

இதை காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாக, இத்தலத்திற்கு வருகை தருகின்றனர். மேலும் சனிக்கிழமை நாளில், இத்தலத்திற்கு வந்து சனிபகவானை வழிபட்டு சென்றால், தோஷங்கள் நீங்கும் என்று பரவலாக பேசப்படுகிறது.