சிவபெருமானுக்குரிய விரதங்களுள், மிகவும் பிரசத்தி பெற்ற விரதம் பிரதோஷம் விரதம். பிரதோஷ காலங்களில், சிவபெருமானை எண்ணி, வழிபாடு செய்து, விரதம் இருந்து வருவது, மிகவும் நல்லது. 


பிரதோஷ காலங்களில், வழிபாடு நடத்தி வருவதனால், நமது முற்பிறவி குற்றங்கள், பாவங்கள் மற்றும் தோஷங்கள் விலகும். மேலும் குழந்தை பேரு இல்லாதவர்கள் மகப்பேறு அடைவர். 


விரதம் மேற்கொள்ள நினைப்பவர்கள், சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷ நாட்களில் விரதம் இருக்க வேண்டும்.அன்றைய நாளில், காலையிலே நீராடி, சிவன் கோவிலுக்கு சென்று, சுவாமிக்கு முன் உள்ள நந்திக்கு அருகம்புல் மாலை சாத்தி, சிவப்பு அரிசி நைவேத்தியம் செய்ய வேண்டும். 


சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது. அன்று முழுவதும் உணவு அருந்தாமல், பால் மற்றும் பழம் உண்டு விரதம் இருக்க வேண்டும். மேலும் வீட்டிற்கு ஏழைகளை மரியாதையுடன் அழைத்து, அன்னதானம் வழங்குவது மிகவும் நன்மை அளிக்கும்.


Find out more: