புதுடில்லி:
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றதும் என்னை ஓய்வு பெற சொன்னார்கள் என்று தான் எழுதி வரும் புத்தகத்தில் அதிரடித்தள்ளார் சுஷில்குமார். விஷயம் இதுதாங்க.


இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர் சுஷில் குமார் என்பது எல்லாருக்கும் நன்றாக தெரியும். இவர் 2008-ம் ஆண்டு நடைபெற்ற பீஜிங் ஒலிம்பிக் வெண்கல பதக்கத்தை பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார். 


தற்போது ‘என்னுடைய ஒலிம்பிக் பயணம் (My Olympic Journey)’ என்ற தலைப்புடன் ஒரு புத்தகம் எழுதி வருகிறார். இதில்தான் பீஜிங் ஒலிம்பிக் தொடருடன் என்னை ஓய்வு பெற சொன்னார்கள் என்று தெரிவித்துள்ளார். இவரை அப்படி சொன்னவர்கள் யார் தெரியுங்களா? 
வெண்கல பதக்கம் வென்று இந்தியா திரும்பிய பின் என் நலவிரும்பிகள் மற்றும் எனக்கு வேண்டியவர்கள் இந்த சிறப்போடு ஓய்வு பெற்று விடு என்று கூறியது என்னை ஆச்சரியத்தில் தள்ளியது. 


ஆனால் நான் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பிறகுதான் மல்யுத்த போட்டி குறித்து அதிகமாக கற்றுக்கொண்டேன். இப்படி அந்த புத்தகத்தில் பல செய்திகளை தெரிவித்துள்ளார் அவர். 


Find out more: