புதுடில்லி:
ஒலிம்பிக்... ஒவ்வொரு நாட்டுக்கும்... விளையாட்டு வீரர்களுக்கும் மிக கனவான விளையாட்டு திருவிழா... சரி அதுக்கென்ன என்கிறீர்களா? வாங்க விஷயத்தை பார்ப்போம். 


இந்த முறை ரியோவில் நடக்கிறது ஒலிம்பிக் போட்டிகள். இதற்கான தகுதி தேர்வில் எந்த முறையில் இல்லாத அளவிற்கு நம்ம நாட்டு விளையாட்டு வீரர்கள் நூறை தாண்டி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதனால் பதக்க வேட்டையாடுவோம் என்ற நம்பிக்கை அதிகளவில் ஏற்பட்டுள்ளது.


ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய டீமுக்கான அதிகாரபூர்வ ஸ்பான்சராக அமுல் நிறுவனம் சொல்லப்பட்டு இருக்கு. அப்ப அமுல் சாப்பிடுங்க... பதக்கத்தை அள்ளுங்கன்னு இனி விளம்பரம் பின்னுவாங்கன்ன சொல்லுங்க...



Find out more: