ஆன்டிகுவா:
பறந்த பந்துகள் 200 தாண்ட பிரித்தெடுத்து விளையாடிய விராட் கோஹ்லியின் இரட்டை சதத்துடன், அஸ்வினின் சதமும் சேர இந்திய அணியின் ஆதிக்கம் விண்ணை எட்டியுள்ளது. 


வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஆண்டிகுவா விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. 


முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (143), அஸ்வின் (22) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்து நேற்று 2ம் நாள் ஆட்டம் நடந்தது. அபாரமாக ஆடிய கேப்டன் கோஹ்லி தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். பின்னர் கேப்ரியல் பந்தில் போல்டானார்.


அடுத்து வந்த விரிதிமன் சகா (40) எடுத்து வெளியேற மறுபக்கம் பொறுப்பை உணர்ந்து ஆடிய அஸ்வின் சதத்தை நிறைவு செய்து அவுட்டானார். தொடர்ந்து 8 விக்கெட் இழப்பிற்கு 566 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா தனது முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது. 


பின்னர் களம் கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி  ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 31 ரன்கள் எடுத்தது. இதனால் இந்தியாவின் பிரமாண்ட ரன்னை எட்ட முடியுமா? என்பது கேள்விக்குறியாகி உள்ளது.



Find out more: