ரியோ:
ஒரு பக்கம் இவர் ஏற்படுத்தும் சாதனைகள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த சாதனைகளை யாராவது உடைப்பார்களா... நீந்தி கடப்பார்களா? என்ன விஷயம்னு புரியலைங்களா?


ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவின் பெல்ப்ஸ் 21-வது தங்கம் வென்று அசத்தி அசத்து என்று அசத்தி வருகிறார். 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 6 தங்கம், பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 8 தங்கம், லண்டன் ஒலிம்பிக்கில் 4 தங்கம் என்று தங்க வேட்டையாடியவர்தான் பெல்ப்ஸ்.


லண்டன் ஒலிம்பிக் போட்டி வரை பெல்ப்சின் கணக்கில் 18 தங்கம் உள்பட 22 பதக்கங்கள் இடம் பெற்று இருந்தது. இந்நிலையில்தான் தனது ரசிகர்களுக்கு அவர் ஒரு அதிர்ச்சியை அளித்தார். என்னன்னா... ஓய்வு பெறுகிறேன் என்ற அறிவிப்புதான் பெல்ப்ஸ்சிடம் இருந்து வந்தது. 


2013-ம் ஆண்டு தொடர் நீச்சலில் பிரான்சிடம் அமெரிக்கா தோல்வியைத் தழுவ மீண்டும் குதித்தார் நீச்சலில்... தற்போது நடந்து வரும் ரியோ ஒலிம்பிக்ஸில் 4x100 மீட்டர் பிரீஸ்டைல் தொடர் நீச்சலில் பெல்ப்ஸ் இடம்பெற்றிருந்ந்த அமெரிக்கக் குழு 3 : 9.92 விநாடிகளில் கடந்து தங்கத்தை தட்டி சென்றது.


இதனால் பெல்ப்ஸின் தங்க பதக்க எண்ணிக்கை 19-ஆக உயர்ந்தது. தொடர்ந்து நேற்று நடைபெற்ற 200 மீ., பட்டர்பிளை மற்றும் 4X200மீ ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டிகளில் அமெரிக்கா குழு அடுத்தடுத்து தங்கம் வென்றது. இதன் மூலம் பெல்ப்ஸின் தங்க பதக்க எண்ணிக்கை 21-ஆனது. ஒலிம்பிக்கில் மொத்தம் அவர் 25 பதக்கங்களை அள்ளி இருக்கிறார். தொடருது இவரது தங்க வேட்டை....


Find out more: