பஞ்சாப்:
அதிர்ச்சியான சம்பவம் மக்கள் கண்ணெதிரே நடந்துள்ளது. இது தமிழில் வந்த வெண்ணிலா கபடிக்குழு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி போல் அமைந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கபடி விளையாடிக் கொண்டிருக்கும் போது 18 வயது வாலிபர் ஒருவர் சுருண்டு விழுந்து மரணமடைந்த சம்பவம்தான் அது.
பாட்டியாலாவில் அரசு பள்ளி ஒன்றில் கபடி போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற சுக்ஜிந்தர் சிங் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார் இறந்தார். இவருக்கு ஏற்கனவே வலிப்பு வியாதி இருந்துள்ளது. தீவிர சிகிச்சை எடுத்து வந்த அவர் அதை தற்போது நிறுத்திவிட்டாராம்.
இறந்த சுக்ஜிந்தர் சிங் மாநில அளவிலான கபடி போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் கபடி விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.