ரியோ:
ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவின் பி.வி.சிந்து சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்தபடி உள்ளது. தங்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.


அரையிறுதியில் உலகின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவரான ஜப்பானின் நசோமி ஒக்குகாராவை வீழ்த்திய பி.வி.சிந்து, இறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரீனை எதிர்கொண்டார்.


இருவருமே கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடிய பி.வி.சிந்து முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தினார். இதனால் ரசிகர்களின் உற்சாகம் கரைபுரண்டது. ஆனால் 2வது செட்டை ஸ்பெயின் வீராங்கனை கரோலினா 21-12 என்ற கணக்கில் கைப்பற்றினார். 


3வது செட்டை கைப்பற்றி தங்கமங்கையாக திகழப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதில் ஸ்பெயின் வீராங்கனை 21-15 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதையடுத்து அவர் தங்க பதக்கம் வெல்ல... நம்ம சிந்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம், ஒலிம்பிக் பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் பி.வி.சிந்து பெற்றார். இதையடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


Find out more: