ரியோ:
முதல் முறை...முதல்முறையாக ரியோவில் தங்கப் பதக்கம் வென்று மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் சாதனைப் படைத்துள்ளது பிரிட்டன் பெண்கள் ஹாக்கி. 


ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஹாக்கி இறுதிப் போட்டியில் தொடர்ந்து 2 முறை தங்கப் பதக்கம் வாங்கிய நடப்பு சாம்பியன் நெதர்லாந்து அணியுடன் பிரிட்டன் அணி மோதியது.


இதில் போட்டியின் நேரம் முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 3-3 கோல்கள் அடித்து சமநிலைப் பெற்றிருந்தது. தொடர்ந்து பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பிரிட்டன் 2-0 என வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது.


ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தது. 



Find out more: