புதுடில்லி:
ஒலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகளுக்கு ராஜிவ் கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒலிம்பிக் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் ஜிம்னாஸ்டிக் தீபாகர்மாகர், பேட்மிண்டன் சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், துப்பாக்கிச்சுடுதல் வீரர் ஜித்துராய் ஆகியோர் இந்தியாவிற்காக சிறப்பாக செயல்பட்டதால்... ராஜிவ் கேல்ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.


இதே போல் குத்துசண்டை, நீச்சல் உட்பட பல்வேறு சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரணோச்சாரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடகள பயிற்சியாளர் நாகபுரி ரமேஷ் , குத்துச்சண்டை பயிற்சியாளர் சாகர் மால் , கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, நீச்சல் போட்டி பயிற்சியாளர் பிரதீப்குமார் , ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி , மல்யுத்த பயிற்சியாளர் மஹாவீர்சிங் ஆகியோர் துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாமும் வாழ்த்துவோம்... வரும் 29ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் விருதுகளை வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


Find out more: