லண்டன்:
கண்டுபுடிச்சேன்... கண்டுபுடிச்சேன்... என் ஜோடியை கண்டுபுடிச்சேன் என்று சொல்லாமல் சொல்லியிருக்கார் இவர்.
யார் தெரியுங்களா? டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாதான் அவர்.
அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வரும் மகளிர் இரட்டையர் பிரிவு டென்னிசில் தனது புதிய ஜோடியான செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவுடன் களமிறங்கினார் சானியா மிர்சா. இதற்கு முன்பு இவர் மார்ட்டினா ஹிங்கிசுடன்தான் பல களங்களை கண்டார். சமீபத்தில் இந்த ஜோடி பிரிந்துவிட்டது.
தற்போது சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில்தான் சானியா மிர்சா, செக் குடியரசின் பார்போரா ஸ்ட்ரைகோவாவுடன் தனது முன்னாள் ஜோடியான சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ், அமெரிக்காவின் கொகோ வன்டெவெகே ஜோடியை எதிர்கொண்டது.
இதில், 7-5, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்ற சானியா - பார்போரா ஜோடி, சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, தனது முதலிடத்தை சானியா தக்க வைத்துக் கொண்டார். எனினும் ஹிங்கிஸ், 2ஆவது இடத்துக்குப் தள்ளப்பட்டார்.