புதுடில்லி:
தண்ணீர் தரவில்லை என்று சர்ச்சையை கிளப்பிய ஒலிம்பிக் மாரத்தான் வீராங்கனைக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது உறுதியாகி உள்ளது.


ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டவர் ஜெய்சா. போட்டி முடிந்த பிறகு இவர் அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியது. மாரத்தான் போட்டியின் போது வீரர்களுக்கு தண்ணீர் வழங்க இந்தியா சார்பில் யாரும் இல்லை. இதனால் தான் உயிருக்கே போராட வேண்டிய நிலை இருந்ததாகவும் புகார் கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்நிலையில் இவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் எச்1 என்1 வைரஸ் அட அதாங்க... பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே ஒலிம்பிக் வீராங்கனை சுதாசிங்கிற்கு பன்றி காய்ச்சல் வந்துள்ளது உறுதியான நிலையில் தற்போது இவருக்கும் பன்றிகாய்ச்சல் வந்துள்ளது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதால் பெரும் பரபரப்பை உருவாகியுள்ளது. 



Find out more: