அமெரிக்கா:
ராட்சத கடிகாரம் சரிந்து விழ... அதிர்ச்சியில் துள்ளிக்குதித்த பிரான்ஸ் வீரர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். இது நடந்தது யு.எஸ். ஓபன் டென்னிஸ் போட்டியில்தான்.


கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்கியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 12-ம் நிலை வீரரான பிரான்ஸ் நாட்டின் கால் மான்பில்ஸ், லக்சம்பார்க் வீரர் ஜைல்ஸ் முல்லரை எதிர்கொண்டார்.


இதில் முதல் செட்டை 6-4 என மான்பில்ஸ் கைப்பற்றினார். 2-வது செட்டில் ஆக்ரோஷமாக விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது முல்லர் அடித்த பந்து உயரமாக வந்து கொண்டிருந்தது. இதை பின்னால் சென்று வேகமாக அடிக்க முயன்றார்.


அப்போது எதிர்பாராதவிதமாக சுவர் மீது வேகமாக மோதிக் கொண்டு விட்டார். இதில் சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த பெரிய கடிகாரம் பெயர்ந்து விழுந்தது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் துள்ளிக்குதித்து கால்மான்பில்ஸ் தப்பினார். இதனால் அவருக்கு காயம் ஏற்படவில்லை.


இச்சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


தொடர்ந்து விளையாடிய அவர் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.


Find out more: