நியூயார்க்:
வாவ்... வாவ்... என்று சொல்ல வைத்து விட்டார் வாவ்ரிங்கா... யு.எஸ்., ஓபன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.


நியூயார்க்கில் யூ.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் ‛நம்பர்-1' வீரர் செர்பியாவின் ஜோகோவிச்சை எதிர்த்து சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா களம் இறங்கினார்.


கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை வீழ்த்தியவர் என்பதால் வாவ்ரிங்கா மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.


முதல் செட்டை போராடி வென்ற வாவ்ரிங்கா, அடுத்த 3 செட்களையும் கைபற்றி, ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்தார். முடிவில் 6-7, 6-4, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வாவ்ரிங்கா தனது முதல் யு.எஸ்., ஓபன் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார்.



Find out more: