சென்னை:
நிறைவேற்றுவாரா? நிறைவேற்றுவாரா? என்று எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார். எதற்காக தெரியுங்களா?


ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று ஒட்டுமொத்த இந்தியர்களின் மனதை கவர்ந்தவர் பி.வி. சிந்து. இவரது வெற்றிக்கு பல பிரபலங்கள் வாழ்த்து சொன்னாலும்... சூப்பர் ஸ்டாரின் டுவிட்தான் செம மாஸ்... மாசாக இருந்தது. எப்படி தெரியுங்களா? நான் உங்கள் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன் என்ற வாழ்த்துதான். 


இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பி.வி. சிந்து, சூப்பர் ஸ்டார் ரஜினி சாரின் டுவீட் அந்த நாளை முழுமையாக்கியது, நான் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். ஒரு நாள் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆவலுடன் உள்ளேன் என்று சொல்ல... இப்போது சிந்துவின் ஆசையை ரஜினி நிறைவேற்றுவாரா என்பதுதான் பெரும் பேச்சாக உள்ளது.



Find out more: