புதுடில்லி:
முதலிடம்... முதலிடம் என்று தன் இடத்தை பிடித்து கொண்டு விட்டார் சானியா மிர்சா... எப்படி தெரியுங்களா?


பான் பசிபிக் ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இரட்டையர் தர வரிசையில் சானியா மிர்சா முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார்.


உலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா (9,730 புள்ளிகள்) முதலிடத்தில் தொடர்கிறார். 


இதற்கு காரணம் பான் பசிபிக் ஓபன் போட்டியில் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் இந்த இடத்தை தக்க வைத்து சானியா மிர்சா முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளார். 


மார்ட்டினா ஹிங்கிஸ் (9,725 புள்ளிகள்) 2-வது இடமும், செக் குடியரசு வீராங்கனை பார்போரா 18-வது இடம் பிடித்துள்ளனர்.


பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் ஏஞ்சலிக் கெர்பர் முதலிடமும், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 2-வது இடத்தை பெற்றுள்ளனர்.



Find out more: