பல ஆண்டுகளுக்கு முன் செய்த சாதனையை நம் வீரர் ஒருவரே மீண்டும் செய்வது மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கிறது . ஷமி 3வது விக்கெட்டை எடுத்தவுடன் 32 ஆண்டுகளுக்கு முன் நாக்பூர் மைதான நினைவுகள் மாறின.
இப்போதைய தலைமுறையினருக்கு சேத்தன் ஷர்மா ஷமி மூலம் தெரியவந்ததற்கு ஷமிக்கு நன்றி. இருவரும் வலது கை வேகப்பந்து வீச்சாளர்கள், ஹாட்ரிக் விக்கெட்டில் லெக் ஸ்டம்பைப் பெயர்த்தோம்,தாடியும் ஒரு ஒற்றுமை என்று கூறினார் சேத்தன் ஷர்மா.