வெஸ்ட் இண்டீஸ் இலங்கையிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனால் சேஸிங் கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்தது. உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பை இலங்கை - வெஸ்ட் இண்டீஸ் இழந்த நிலையில் இந்தப் போட்டி நடந்தது.
பெரேரா 64, பெர்னாண்டோ 104 ரன்கள், திரிமன்னே 45 ரன்கள் குவிக்க, இலங்கை 338 ரன்கள் எடுத்தது.சேஸிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களுக்குள் 4 விக்கெட்இழந்தது. பூரன் தனி ஆளாக இலங்கை அணியை மிரட்ட, ஏஞ்சலோ மாத்யூசின் பந்தில் ஆட்டமிழந்தார்.
ஓவருக்கு 9-10 ரன்கள் அடிக்க வேண்டும் நிலையில் வெஸ்ட் இண்டீஸ் போராடியது.வெ.இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழந்து 315 ரன்கள் எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் பூரன், ஆலன் ஜோடி பாராட்டைப் பெற்றது.