நடிகர் சித்தார்த் இந்திய அணி மாற்றங்களை  விமர்சனம் செய்து இருக்கிறார். அவர் வெளியிட்ட டிவிட் வைரலாகி உள்ளது.இந்திய அணியில் இருந்து  விஜய் சங்கரும் காயம் காரணமாக  விலகி இருக்கிறார். பயிற்சியின் போது பும்ரா போட்ட யார்க்கரால் அவருக்கு காயம் ஏற்பட்டது.
Image result for Actor siddharth with Rayudu

காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.இவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிகிறது. பல நாட்களாக களமிறங்க காத்திருக்கும் முக்கிய வீரரான அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை.




அம்பதி ராயுடு புறக்கணிக்கப்படுவது குறித்து தற்போது நடிகர் சித்தார்த் "அன்புள்ள ராயுடு, நீங்கள்  சிறப்பான விஷயத்திற்கு தகுதியானவர். மன்னித்துவிடுங்கள். நீங்கள் வலிமையாக இருங்கள் ,உங்கள் திறமைக்கு கிடைக்க வேண்டியது இது அல்ல" என்று டிவிட் செய்துள்ளார்.


Find out more: