புதுடில்லி:
அலார்ட்.. அலார்ட்.. என்று எச்சரிக்கை காலிங்பெல் அடித்துள்ளது டிரெண்ட் மைக்ரோ நிறுவனம் எதற்கு தெரியுங்களா? 


ஆண்ட்ராய்ட் மொபைல்களை தாக்கும் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவுகிறது என்பதுதான் அந்த எச்சரிக்கை. டிரெண்ட் மைக்ரோ நிறுவனம் மென்பொருள் பாதுகாப்பு நிறுவனம். இது இப்ப சொல்லியிருக்கிறதுதான் அதிர்ச்சியோ... அதிர்ச்சி. 


காட்லெஸ் என்ற வைரஸ் இப்ப ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்துபவர்கள் சில அப்ளிகேசன்களை டவுன்லோடு செய்யும் போது அழையா விருந்தாளியாக உள்ளே புகுந்திடுது. அப்புறம் தன்னோட வேலையை காட்டி தேவையில்லாத, நாம கேட்காத அப்ளிகேஷன்கள் இதுவே இன்ஸ்டால் செய்து விடுகிறது. இதனால் ஆண்ட்ராய்டு போனுக்கு ஆபத்தோ ஆபத்து.


கூகுள் பிளே ஸ்டோர் உட்பட முக்கிய அப் ஸ்டோர்களில் இருந்து டவுண்லோடு செய்யப்படும் அப்ளிகேசன்களிலும் இந்த வைரஸ் ஒட்டிக்கிட்டு வந்துடுது. இதனால் ஆண்ட்ராய்டு போனுக்கு "ஆப்புதான்."  ஜாக்கிரதை என்று எச்சரிக்கை பெல் அடித்துள்ளது அந்த நிறுவனம். 


தற்போது பயன்பாட்டில் உள்ள 90 சதவீத ஆண்ட்ராய்ட் போன்களையும் இந்த வைரஸ் தாக்கும் அபாயம் இருக்காம். இதுவரை இந்த வைரஸ் சுமார் 9 லட்சம் போன்களை காவு வாங்கியுள்ளது. இதில் பாதியளவு இந்தியாவை சேர்ந்தது என்பதுதான் வேதனை.



Find out more: