அமெரிக்கா:
வருது... வருது... மற்றவை எல்லாம் விலகு...விலகு... அதிக வசதிகளை கொண்டு கூகுள் தயாரிப்பில் உருவாகும் புதிய ஸ்மார்ட் போன் சீக்கிரமே சந்தைக்கு வருது என்று தகவல்கள் பரபரபக்கின்றன. 


ஸ்மார்ட் போன் உலகில் கவனம் செலுத்திவரும் கூகுள் நிறுவனம் நக்சஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. ஹீவாயி, எல்ஜி,  மோட்டோரோலா, HTC ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஸ்மார்ட் போன்களின் வரிசையை அதிகரித்தது.


வரவேற்பை பெற்ற இந்த ஸ்மார்ட் போன்களை விட அதிக வசதி கொண்ட புதிய போனை அதாவது Nexus சீரிஸ் அல்லாத புதிய ஸ்மார்ட் போனை சந்தைக்கு கொண்டுவரும் முயற்சியில் கூகுள் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டு இருக்காம். 


டிசைனில் ஆரம்பித்து சாப்ட்வேர் உட்பட அனைத்திலும் கூடுதல் வசதி இருக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கவனம் செலுத்துதாம். இந்த போன் இந்த ஆண்டின் இறுதியில் சந்தைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.


Find out more: