புதுடில்லி:
மிகவும் எடை குறைவான அதாவது 16 கிராம் எடையில் ப்ளூடூத் இயர் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதை ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


ஜீப்ரானிக்ஸ் நிறுவனம் புதிய ப்ளூடூத் இயர்ஃபோனாக ZEB-BH330 எனப் பெயரிடப்பட்டுள்ள மிகவும் எடை குறைவான ப்ளூடூத் ஹெட்செட்டை அறிமுகப்படுத்தி உள்ளது.


இந்த ஹெட்செட்டில் சத்தத்தை குறைக்கும் தன்மை உள்ளது. வெறும் 16 கிராம் எடையில் காதில் கச்சிதமாக பொருந்தக்கூடிய வடிவமைப்புடன் இந்த ப்ளூடுத் அமைக்கப்பட்டுள்ளது. 


ப்ளூடூத் 4.0 ஒயர்லெஸ் தொழில்நுட்பம் கொண்ட இதில் உள்ளமைக்கப்பட்ட பேட்டரி 5 மணிநேரம் வரை ஆடியோ மற்றும் அழைப்புகளை கையாளக் கூடியது. இது 1 வருட உத்திரவாதத்துடன் கிடைக்கிறது. இதன் விலை அதிகமில்லை ஜென்டில்மேன்ஸ் ரூ.1599 மட்டுமே. நல்ல பொருட்கள், நீடித்து உழைக்கும் பொருட்களுக்கான விலையை நம் மக்கள் பொருட்படுத்துவதில்லை. எனவே இந்த ப்ளுடூத்தும் மக்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.


Find out more: