புதுடில்லி:
ஏங்க பித்தளை வாங்க ரேட்டுக்கு உங்களுக்கு வைரம் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்வீர்களா? சொல்லமாட்டீங்க இல்லியா? அதுபோலதான்ப்ரி டம் 251 ஸ்மார்ட்போன் வந்துருக்கு.


ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போனை டிஜிட்டல் இந்தியவில் கீழ் அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஸ்மார்ட்போன் ப்ரிடம் 251 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எப்போது சந்தைக்கு வரும் என்று எல்லோரும் காத்துக்கிடந்தாங்க இல்லியா. 


இப்ப வந்துட்டேன்... நான் வந்துட்டேன் என்று பெரும் துள்ளலுடன் பிரிடம் 251 ஸ்மார்ட்போன் நேற்று (திங்கட்கிழமை) முதல் விற்பனைக்கு வந்தே வந்து விட்டது. ஆனா  இதை கடையில் போய் வாங்க முடியாதுங்க...


ஆன்லைனில் புக்கிங் செய்து தான் பெற முடியும். கேஷ் ஆன் டெலிவரி வசதியும் உள்ளது. எப்படி? உங்க வசதி... இந்த ப்ரிடம் 251 சக்ஸஸ் என்று தகவல் வந்தால் அப்புறம் இதை கையில் கூட பிடிக்க முடியாது என்று சொல்றாங்க... வாங்குங்க... வாங்கி பார்த்துட்டு சொல்லுங்க நாங்களும் வாங்கி கொள்கிறோம் என்று நம்ம ஆளுங்க சொல்றாங்கப்பா...



Find out more: