புதுடில்லி:
மும்முரம்... தீவிரம்... என்று களம் இறங்கி உள்ளது மத்திய அரசு. எதற்காக தெரியுங்களா?
இதோ இதற்காகத்தான். நாட்டில் உள்ள கிராமப்புறங்களில் மொபைல் போன் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது 5.97 லட்சம் கிராமங்களில் 5.41 லட்சம் கிராமங்களுக்கு மொபைல் நெட்வொர்க் வசதி உள்ளது. இது பெரிய அளவில் சாதனையாக கருதப்பட்டாலும் 55,669 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் விரைவில் அங்கும் மொபைல் கவரேஜை ஏற்படுத்தி அங்கு மொபைல் போன் சேவைகளை கொண்டு வர மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது என்று தகவல்தொடர்பு துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா பார்லிமென்டில் தெரிவி்த்துள்ளார்.