புதுடில்லி:
கால் நூற்றாண்டு ஆகிவிட்டது... ஓடியே போய்விட்டது... எதற்கு தெரியுங்களா... இன்டர்நெட் வந்துதான் கால் நூற்றாண்டு போயோ விட்டது.
இன்டர்நெட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து நேற்றுடன் (23ம் தேதி) 25 ஆண்டுகள் நிறைவடைந்ததுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியால் உலகமே இப்போ நம்ம உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது.
இதில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சி தொழில்நுட்ப உலகிற்கே பெரும் ஆச்சரியம்தான். உலகில் உள்ள அனைத்து நாட்டினரும் இன்டர்நெட் வழியாக இணைக்கப்பட்டுவிட்டார்கள்.
உலகில் உள்ள சுமார் 300 கோடி மக்கள் இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் உள்ள உறவினருடன் அரசம்பட்டியில் உள்ளவர்கள் ஸ்கைப்பில் முகம் பார்த்து பேசும் அளவிற்கு டெக்னாலஜி வளர்த்து விட்டுள்ளது. தூரங்கள் சுருங்கி போய் விட்டது. இந்த வளர்ச்சியின் தொடக்க புள்ளியாக அமைந்த நாள் ஆகஸ்ட் 23, 1991 என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்தை சேர்ந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானி டிம் பெர்னர்ஸ் லி www என்னும் புரோட்டாக்காலை உருவாக்கினார். இந்த புரோட்டாகால் ஆகஸ்ட் 23, 1991ல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இந்த புரோட்டகாலுக்கு நேற்று 25 வயது நிறைவடைந்ததுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.