மெல்போர்ன்:
யூகலிப்டஸ் மரத்தில் இருந்து விமான பெட்ரோல் தயாரிக்க முடியும் என புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.


புதைபடிவங்களில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. அவை வாகனங்கள் மற்றும் விமானம் போன்றவற்றை இயக்க பயன்படுத்தப்படுகிறது. இதனால் அதிகளவில் கார்பன் வெளியாகிறது. 


காற்று மூலம் ஏற்படும் பெரும்பாலான மாசுவுக்கு இது காரணமாக அமைகிறது. தற்போது பெட்ரோல் தட்டுப்பாடும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே மாற்று எரிபொருள் தயாரிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் தீவிரமாகி உள்ளனர்.


இந்த நிலையில்தான் யூகலிப்டஸ் மரத்தில் இருந்து பெட்ரோல் தயாரிக்க முடியும் என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் அதிகளவில் யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன.


இதன் மூலம் விமானத்துக்கு பயன்படுத்தப்படும் உயர்ரக பெட்ரோல் தயாரிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கார்ஸ்டென் குல்கெய்ம் கண்டுபிடித்துள்ளார். யூகலிப்டஸ் மரம், மரக்கூழ் மற்றும் காகிதம் தயாரிக்கவும் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. சிறிதளவே ஆயில் தயாரிக்கப்படுகிறது.


யூகலிப்டஸ் மரத்தில் இருந்து ‘மோனோ டெர்பென்ஸ்’ என்ற மூலப் பொருள் கிடைக்கிறது. அவற்றை அதிசக்தி வாய்ந்த விமான பெட்ரோல் ஆக மாற்ற முடியும். இவற்றின் மூலம் உலக அளவில் 5 சதவீத விமான சேவைக்கான பெட்ரோலை தயாரிக்க முடியும் என்றும், குறைந்த அளவே கார்பன் வெளியாகும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. 


Find out more: