பீஜிங்:
கட்டுபாட்டை இழந்து விண்வெளியில் சுற்றியபடி வரும் விண்வெளி நிலையத்தின் சில பகுதிகள் எரியாமல் அடுத்த ஆண்டில் பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 


சீனா விண்வெளியில் ஆய்வு மையம் ஒன்றை பெரிய அளவில் அமைக்க உள்ளது. 2022-ம் ஆண்டில் இது செயல்பட தொடங்கும். இதற்கு முன்னோட்டமாக அதற்கு முன்னோட்டமாக மாதிரி விண்வெளி மையங்களை விண்வெளிக்கு அனுப்புகிறது.


இப்படி கடந்த வாரம் டியான்காங்-2 என்ற விண்வெளி மையத்தை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக நிலைநிறுத்தியது. இதற்கு முன் அனுப்பிய டியான்காங்-1 என்ற விண்வெளி நிலையம் 8 டன் எடை கொண்டது.


2011ம் ஆண்டில் அனுப்பப்பட்ட இந்த விண்வெளி நிலையம் தற்போது கட்டுப்பாட்டை இழந்து விண்வெளியில் சுற்றியபடி உள்ளது. அது புவிஈர்ப்பு வட்டத்துக்குள் வந்து பூமியில் விழும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதை சீனாவும் உறுதிப்படுத்தி உள்ளது. ஆனால் இது அடுத்த ஆண்டில்தான் நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 


ஆனால் இதுபற்றி சீனா கூறும்போது, பூமியில் விழும் பாகங்கள் பெரும்பாலும் கடலில் தான் விழும். எனவே பூமிக்கு ஆபத்து இல்லை என்று தெரிவித்தது.



Find out more: