முகப்பரு பிரச்சனைகளை சரி செய்யும் குறிப்புகளை இன்றைய அழகு குறிப்பு தகவலில் நாம் பார்க்கலாம். 


1. அதிக எண்ணெய்ப்பசை இருந்தால், முகத்தில் பருக்கள் வரும். அதனால் எண்ணெய் பசை உள்ளவர்கள், முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவி வர, பருக்கள் வராது. 


2. தேனுடன் சிறிது இலவங்க பட்டை சேர்த்து, முகத்தில் தடவலாம். 


3. கடுகை அரைத்து, அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி வந்தால், பருக்கள் மறையும்.


4. முட்டையின் வெள்ளை கருவை, பரு உள்ள இடங்களில் தேய்த்தால், பருக்கள் மாறும். 


5. 1 கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் நன்கு கொதிக்க விட்டு, அதை முடி வைத்து, 10 நேரம் கழித்து, அந்த தண்ணீரால் முகத்தை கழுவி வந்தால், முக பருக்கள் நீங்கும்.


6. சோற்று கற்றாழையில் இருக்கும் பசையை முகத்தில் தடவி வந்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மாறும். 


7. எலுமிச்சை சாற்றுடன் 4 சொட்டு தேன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் இருமுறை வைத்து, 2 மாதம் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் மாறும்.


Find out more: